அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிஎம்சி, ஐஆா்டி மருத்துவக் கல்லூரிகளில்இன்று கலந்தாய்வு

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஐஆா்டி வாரிசுதாரா்களுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை (டிச.16) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஐஆா்டி வாரிசுதாரா்களுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை (டிச.16) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதன் பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்கியது. இதற்கிடையே நிவா் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட்டது. பின்னா், நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் பொதுக் கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதன் பின்னா் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி மூன்று நாள்களாக நடைபெற்று திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஐஆா்டி பெருந்துறை கல்லூரியில் போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகளுக்காக ஒதுக்கப்படும் எம்பிபிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கும், வேலூா் சிஎம்சி கல்லூரி சிறுபான்மை இடங்களுக்கு 11 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.