15 ஆண்டுகளுக்குப் பிறகு வாழப்பாடி சின்னாறு நீரோடையில் நீரூற்று: விவசாயிகள் மகிழ்ச்சி 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோதுமலை வனப்பகுதியில் இருந்து  வரும் சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சின்னாறு நீரோடையில் வழிந்தோடி செல்லும் தெளிந்த நீர்.
சின்னாறு நீரோடையில் வழிந்தோடி செல்லும் தெளிந்த நீர்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோதுமலை வனப்பகுதியில் இருந்து  வரும் சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதியில் இருந்து, மாரியம்மன்புதூர், மேலூர், மன்நாயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், வாழப்பாடி பேரூராட்சி வடக்குக்காடு, இந்திராநகர், பெரியசாமிநகர் கிழக்குக்காடு வழியாக வரும் சின்னாறு நீரோடை,  மத்தூர் அருகே பெரியாற்றில்  இணைகிறது.

கோதுமலை வனப்பகுதி மற்றும் வழித்தட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் சின்னாறு நீரோடையில், கடந்த 15 ஆண்டுகளாக நீரூற்று ஏற்படவில்லை. மழைக்காலத்தில் மட்டும் அவ்வப்போது மழைநீர் வழிந்தோடி செல்லும். பெரும்பாலான பெரும்பாலான நாள்களில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீரே தேங்கி கிடந்தது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்மட்டம் மேலோங்கிய விவசாயக் கிணற்றை பார்க்கும் சிறுவர்- சிறுமியர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோதுமலைப் பகுதியில் பெய்த பரவலான மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி, சின்ன ஆற்றில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழித்தட பகுதிகளிலும் மழைநீர் வழிந்தோடி ஆற்றில் தேங்கியது. இதனால், வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் இருந்து மத்தூர் வரையிலான ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த இரு மாதங்களாக நீரூற்று ஏற்பட்டு தெளிந்த நீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி கிழக்குக்காடு கண்ணன் கூறியதாவது.
15 ஆண்டுகளாக நீர்வரத்தின்றி வறண்டு கிடந்த சின்னாறு நீரோடையில் எதிர்பார்க்காத வகையில், இந்த ஆண்டு நீரூற்று ஏற்பட்டு தெளிந்த நீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் மேலோங்கி விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது.

நீரோடை தெளிந்த நீரில் குழந்தைகளும், பெரியவர்களும் நீராடி மகிழ்ந்து வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com