இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து போராட்டம்

புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

News image
விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து போராட்டம்
Updated On :17 டிசம்பர் 2020, 12:29 pm

DIN

திருச்சி: புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் விரைவு ரயிலை மறித்து இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் பல்வேறு அமைப்பினர், கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்டை ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை மாலை வந்த ஜனசதாப்தி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து வந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை இருப்புப்பாதையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர். இந்த சம்பவத்தால், திருச்சி கோட்டை ரயில்நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.