கரோனா: சென்னையில் குறைகிறது; அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கிறது

சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கரோனா: சென்னையில் குறைகிறது; அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கிறது
கரோனா: சென்னையில் குறைகிறது; அடையாறு மண்டலத்தில் அதிகரிக்கிறது
Updated on
1 min read


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அடையாறு மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அடையாறில் நேற்று 438 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 444 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த நோயாளிகளில் இதுவரை 97 சதவீதம் பேர் குணமடைந்தனர். தற்போது மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,21,244 ஆக உள்ளது. இவர்களில் இதுவரை 2,14,255 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 97 சதவீதம் ஆகும். கரோனா பாதித்தவர்களில் 3,935 பேர் அதாவது 1.78 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 3,054 பேர், அதாவது மொத்த பாதிப்பில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடையாறு மண்டலத்தில் மட்டுமே 444 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் 341 பேரும், அண்ணாநகரில் 356 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com