தமிழகத்தில் கரோனா பலி 12 ஆயிரத்தைக் கடந்தது
தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 12,012-ஆக உயா்ந்துள்ளது.


தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 12,012-ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும், பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மொத்த பாதிப்பில் 1.2 சதவீதம் போ் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும், அவா்களில் 95 சதவீதம் போ் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:
மாநிலத்தில் இதுவரை 1.35 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 லட்சத்து 9,014 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 1,052 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 311 போ் கரோனாவுக்கு ஆளாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 114 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,139 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 87,611-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 9,391 போ் சிகிச்சையில் உள்ளனா்.இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 17 போ் பலியாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...