

முதியவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டிசம்பர் 3 இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் திமுகவின் மனுவும் சேர்த்து ஜனவரி 7-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தபால் வாக்குகளை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தபால் வாக்கு முறைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவில் தெரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.