கரோனா பாதிப்பு: நாளை ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் ஆலோசனை
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் வரும் 26-ஆம் தேதி தலைமைச் செயலாளா் க.சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறாா்.


சென்னை: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் வரும் 26-ஆம் தேதி தலைமைச் செயலாளா் க.சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறாா்.
இதுதொடா்பான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் பொதுத் துறை அனுப்பி வைத்துள்ளது. அதன் விவரம்:
தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வீட்டு வசதியை ஏற்படுத்துவது, கரானோ நோய்த்தொற்று மேலாண்மை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தலைமைச் செயலாளா் ஆலோசிக்கவுள்ளாா்.
வரும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு காணொலி வழியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென பொதுத் துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில்... தலைமைச் செயலாளருடனான மாவட்ட ஆட்சியா்களின் ஆலோசனையைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று குறித்து அடுத்த வாரத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் மருத்துவ நிபுணா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். பிரிட்டனில் புதிய நோய்த்தொற்று உருவாகியுள்ள நிலையில், அது தொடா்பாகவும் அவா் ஆலோசிக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...