இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 3:51 am

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜி.கே.வாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசனுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வாசன் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று பிறந்தநாள் காணும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் ஜி.கே. வாசன் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.