தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 2:58 pm IST

கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட   ஒதுக்கீட்டை பெறுவதற்கு கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிரீமிலேயரை காட்டி பிற பிற்படுத்தப்பட்டோருக்கு  ஏற்கனவே இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், இந்த திட்டம் கூடுதல் சமூக அநீதியை இழைக்கும்.

மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 3 பத்தாண்டுகள் ஆகி விட்ட நிலையில், மத்திய அரசு பணிகளிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அளவு 10 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதற்கான காரணிகளில் முக்கியமானது  கிரிமீலேயரைக் காட்டி இடஒதுக்கீடு மறுக்கப்படுவது தான். கிரிமீலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை ஏற்காத மத்திய சமூகநீதி அமைச்சகம், இட ஒதுக்கீட்டை தடுக்கும் வகையிலான பரிந்துரையை மட்டும் ஏற்பது நியாயமல்ல.

 எனவே,  மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலை நிறுத்த, 1) ஊதியத்தை கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது, 2) கிரிமீலேயர் வரம்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 11 லட்சமாக உயர்த்த வேண்டும் என வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அதை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும், 3) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு கிரிமீலேயர் எந்த அளவுக்கு தடையாக உள்ளது என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு கிரிமீலேயர் தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.