இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உளுந்தூர்பேட்டை: சாலையோர தடுப்பில் கார் மோதியதில் 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பில் கார் மோதியதில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

News image
Updated On :13 ஜனவரி 2020, 11:32 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பில் கார் மோதியதில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

திண்டுக்கல் சிலுவை தெருவை சேர்ந்த மல்லிகா, நிஷா, அவருடைய குழந்தைகள் இரண்டு பேர், கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

Story image

இன்று காலை வண்டிப்பாளையம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கார் தடுப்புக் கட்டையை தாண்டி நெடுஞ்சாலையில் தடம் புரண்டு விழுந்தது.

அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த தனியார் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

Story image

இந்த விபத்தில் காரில் இருந்த மல்லிகா, நிஷா, 3 வயது குழந்தை மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் உள்ளே ஒரு குழந்தை பலத்த காயத்துடன் உயிருடன் இருந்தது. அந்த குழந்தையை திருநாவலூர் போலீசார், ஜேசிபி இயந்திரத்தை வைத்து கார் மேல் இருந்த தனியார் பேருந்தை தள்ளி விட்டு, காரின் உள்ளே விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Story image

விபத்தில் இறந்து கிடந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். தனியார் பேருந்தில் இருந்த 24 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.  இந்தக் கோர விபத்தால் ஒரு மணி  நேரத்துக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.