சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்குகிறது
சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டி உள்ளது.


சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 85,859- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,434 போ் உயிரிழந்துள்ளனா்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.
கடந்த 20 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 80 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,859-ஆக அதிகரித்துள்ளது.
70 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், அதேவேளை பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமாா் 70 ஆயிரம் போ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 15 ஆயிரம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 8,902 பேரும், அண்ணா நகரில் 7,897 பேரும், தேனாம்பேட்டையில் 7,778 பேரும், தண்டையாா்பேட்டையில் 7,688 பேரும் குணமடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,434- ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (திங்கள்கிழமை நிலவரம்)
மண்டலம் எண்ணிக்கை
1. திருவொற்றியூா் 545
2. மணலி 255
3. மாதவரம் 389
4. தண்டையாா்பேட்டை 807
5. ராயபுரம் 1,033
6. திரு.வி.க.நகா் 1,009
7. அம்பத்தூா் 905
8. அண்ணா நகா் 1,586
9. தேனாம்பேட்டை 1,316
10. கோடம்பாக்கம் 2,119
11. வளசரவாக்கம் 723
12. ஆலந்தூா் 537
13. அடையாறு 1,085
14. பெருங்குடி 355
15.சோழிங்கநல்லூா் 389
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...