அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு: ஓபிஎஸ் கண்டனம்

​புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News image
​புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
Updated On :23 ஜூலை 2020, 4:27 pm

DIN


புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-இன் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்." என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

முன்னதாக, புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச் சாலை வில்லியனூர் பகுதி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் இன்று (வியாழக்கிழமை) காவித் துண்டு அணிவித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்ஜிஆர் சிலையை அவமதித்தது மட்டுமின்றி, பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.