/

சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 85% பேர் குணமடைந்தனர்; உயிர் பலி2.13%

சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களில் 85% பேர் அதாவது 81,530 பேர் குணமடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

News image
சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 85% பேர் குணமடைந்தனர்; உயிர் பலி2.13%
Updated On :29 ஜூலை 2020, 6:11 am

DIN


சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களில் 85% பேர் அதாவது 81,530 பேர் குணமடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதே சமயம், கரோனா பாதித்தவர்களில் 13% பேர் அதாவது 12,852 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,056 பேர் (2.13%) உயிரிழந்துவிட்டனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1840 பேரும், அண்ணாநகரில் 1456 பேரும், அடையாறில் 1203 பேரும், அம்பத்தூரில் 1,159 பேரும், திருவிகநகரில் 1129 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஜூன் 24-ஆம் தேதி 50 ஆயிரம் ஆக அதிகரித்தது.

கடந்த ஒரு மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 90 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 1,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,438-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 81,530 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85 சதவீதமாகும். 12,852 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2.12 சதவீதம் இறப்பு: சென்னையைப் பொருத்தவரை குணமடைந்தோா் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 316 போ், ராயபுரத்தில் 252 போ், தண்டையாா்பேட்டையில் 242 போ், கோடம்பாக்கத்தில் 221 போ், திரு.வி.க.நகரில் 214 போ் என மொத்தமாக 15 மண்டலங்களில் 2,056 போ் இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இது 2.12 சதவீதமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.