திருச்சுழி: காரைக்குளம் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் சிஏசிஎல் எனும் அமைப்பு சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Published on
Updated on
1 min read


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் சிஏசிஎல் எனும் அமைப்பு சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குக் காரைக்குளம் ஊராட்சியை உள்ளடக்கிய துலுக்கன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்து தொடக்கி வைத்தார். 

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகளான ஆர் சி பி டி எஸ் ( திருச்சுழி) , சி.எம்.சி.ஜே ( திருச்சுழி), ஸ்பீச் (சிவகாசி மற்றும் திருச்சுழி). டெஸ்ட் மற்றும் நீட்ஸ் ( திருவில்லிபுத்தூர்). ஓடம் (நரிக்குடி), ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவான சிஏசிஎல் எனப்படும் குழந்தைகள் உழைப்பு எதிர்ப்புப் பிரச்சார அமைப்பு சார்பில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அதன் ஒருங்கினைப்பாளர் கிராம மக்களிடையே பேசியதாவது, ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறிய அவர், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10.1 மில்லியன் குழந்தைத் தொழிலாள்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில்  சிஏசிஎல் அமைப்பின் நோக்கமானது குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை ஒழிப்பதாகும். ஆகவே பெற்றோர்கள் சிஏசிஎல் அமைப்பிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் பேசினார். மேலும் மேற்கூறிய குழந்தைகளுக்கு எதிரான பல பிரச்னைகள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com