10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: முதல்வர் -அமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.


சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவது குறித்த வழக்கில் வரும் 11-ஆம் தேதியன்று, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகளை நடத்தலாமா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தமிழக அரசு ஆராயும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தில் அறிக்கையாக அளிக்கப்பட உள்ளது.
இதேபோன்று, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...