எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆன்லைன் வகுப்புகள் குறித்து 2 நாள்களில் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் 2 நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜூன் 2020, 7:46 am

DIN


தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். 

ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து  முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா? அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.