இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொலை வழக்கு: கூலித் தொழிலாளிக்கு ஆயுள்

சங்கரன்கோவில் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்  தீர்ப்பு அளித்தது. 

News image
Updated On :7 மார்ச் 2020, 3:51 pm

DIN

சங்கரன்கோவில் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்  தீர்ப்பு அளித்தது. 

சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அருகேயுள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (31). கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 12ம் கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் கேரளாவிற்கு வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரது தந்தை கரிவலம் வந்த நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடிவந்தனர்.

இந்நிலையில், திருவேங்கடநாதபுரம் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தின் அருகில் முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுப்புலாபுரம் கீழத்தெருவை சேர்ந்த மரியதாஸ் மகன் முருகேசன் (37) கூலித்தொழிலாளி. வீராணபுரத்தை சேர்ந்த ராமர் மகன் முத்துக்குமரன்(30) இருவரை கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு நெல்லை 4வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். வழக்கு நடைபெற்று வந்தபோது, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முத்துக்குமரன் இறந்தார்.  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு ஆயுள்தண்டனையும்,  15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் துரை முத்துராஜ் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.