சுய ஊரடங்கு எதிரொலி: தமிழகம் வெறிச்சோடியது
சுய ஊரடங்கை அடுத்து மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.


சுய ஊரடங்கை அடுத்து மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு கடந்த 19-ஆம் தேதி உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.

எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும் மக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதேபோல், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்தநிலையில் சுய ஊரடங்கையடுத்து மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் பிரமதான சாலைகள் வெறிச்சோடியுள்ளது.

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. சுகாதரத்துறை, காவல்துறை உள்ளிட்டவையைத் தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுய ஊடரங்கையடுத்து புதுச்சேரியில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...