கரோனா தடுப்புப் பணிக்கு ஈரோடு எம்.பி ரூ.1 கோடி ஒதுக்கீடு
ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள, ஈரோடு எம்.பி அ.கணேசமூர்த்தி ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து


ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள, ஈரோடு எம்.பி அ.கணேசமூர்த்தி ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்று கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. அதற்கு உதவும் வகையில், ஈரோடு எம்.பி. என்ற முறையில் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1 கோடி நிதியை ஒதுக்கி உள்ளேன்.
அதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட பகுதிக்கு ரூ.55 லட்சம், திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் சட்டப்பேரவை பகுதிக்கு ரூ.35 லட்சம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு ரூ.15 லட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...