காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆந்திர-கர்நாடகம் எல்லையில் 1500 ஆந்திர மக்கள் தவிப்பு

திருப்பதி:கர்நாடக மாநிலத்திற்கு பிழைப்பு தேடி சென்ற 1500 ஆந்திர மக்கள் மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.

News image
Updated On :27 மார்ச் 2020, 2:05 pm

DIN

திருப்பதி:கர்நாடகம் மாநிலத்திற்கு பிழைப்பு தேடி சென்ற 1500 ஆந்திர மக்கள் மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டிணம், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1500 பேர் கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களில் பிழைப்பு தேடி சென்று தங்கியுள்ளனர். ஊரடங்கு உத்திரவு அமல் காரணமாக வேலையில்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடிவு செய்து ஆந்திர-கர்நாடக எல்லையில் உள்ள கோலார் மாவட்டம் வழியாக ஆந்திராவிற்கு நுழைய முயன்றனர். 

ஆனால் அவர்களை ஆந்திராவிற்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் உரையாடினர். நாடு முழுவதும் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று குறித்த பயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வசதியாக தங்க அங்கு முகாம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் வாக்களித்துள்ளனர். 

மேலும் அவர்களை தனிமைபடுத்தி கரோனா தொற்று பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து அவர்களை 14 நாட்கள் வரை எல்லையிலேயே தங்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.