கரோனா தடுப்புப் பணிக்கு அரக்கோணம் எம்.பி. ரூ. 1 கோடி நிதி
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரக்கோணம் தொகுதி திமுக.எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரக்கோணம் தொகுதி திமுக.எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா்களுக்கு உதவிடும் வகையில், அரக்கோணம் தொகுதி திமுக.எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி மற்றும் ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய இரு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் என மொத்தமாக ரூ.1.5 கோடி நிதியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியிடம் ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஷ்வரப்பன் ஆகியோர் நேரில் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...