காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுவை பேரவை மார்ச் 30-இல் கூடுகிறது

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

News image
Updated On :27 மார்ச் 2020, 3:50 pm

DIN

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்றறு பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்.15-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் கரோனா பாதிப்பால் இதுவரை உயிரழப்பு இல்லை என்றாலும், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க ஏற்கெனவே அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இருப்பினும் பேரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், பேரவையை மார்ச் 30-ஆம் தேதி கூட்ட பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பேரவை செயலர் வின்சென்ட் ராயர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

கடைசியாக பிப்.12-ஆம் தேதி புதுவைப் பேரவை கூட்டப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.