சமூக தனித்திருத்தல் சிறை வாசமல்ல: தலைமை நீதிபதி கடிதம்
சமூக தனித்திருத்தல் சிறை வாசம் அல்ல. கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


சமூக தனித்திருத்தல் சிறை வாசம் அல்ல. கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,
அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி, நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற கூறியுள்ளார்.
கரோனா அச்சுறத்தலில் இருந்து மீண்டு வர நாம் உறுதியேற்போம். கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை நாம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறோம்.இதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.மேலும், அச்சமூட்டும் இந்த அசாதரண நிலையும் சூழலும் நாளை மீண்டும் ஏற்படும் என்பதை உணர்ந்து, நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
சமூக தனித்திருத்தலை வெறுமனே பிறருக்கு கற்பிக்காமல் அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் .சமூகத் தனித்திருத்தல் கையாள்வது கடினமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதனை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் சமுக தனித்திருத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும் என அந்த கடிதத்தில் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...