ஈரோட்டில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்வு
ஈரோட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.


ஈரோட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் அவர்கள் வந்து சென்ற ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிவாசல் போன்ற இடங்களில் உள்ளவர்கள் 1,190 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஈரோட்டை சேர்ந்த 10 பேர் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 15 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் ஒருவருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதியாகிய நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேரில் 5 பேருக்கு கரோனா உறுதியானது. மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என 58 பேர் தனிமையாக, சிகிச்சை வழங்கப்படுகிறது.
அதுபோல் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் வீடுகளில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,696 என உயர்ந்துள்ளது.
மேலும் கொடுமுடி பகுதியில் 132 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...