காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்பூர் மாவட்டத்தில் 1,360 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடுகள் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 1,360 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2020, 12:10 pm

DIN

திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடுகள் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 1,360 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பழைய பேருந்து நிலையத்துக்கு காய்கறி சந்தை சனிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தையினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில தற்காலிகமாக காய்கறி சந்தைகள் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் திருப்பூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் பொருள்களை நின்று வாங்குவதற்கு 1 மீட்டர் இடைவெளிக்கான வட்டம் வரைந்து, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 1,360 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவப் பொருள்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே, திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் ,திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.