அருப்புக்கோட்டை , திருச்சுழி சுற்று வட்ட கிராமங்களில் விடிய விடிய கனமழை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்று வட்ட கிராமங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது.


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்று வட்ட கிராமங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதில் பல கிராமங்களில் கண்மாய்கள், குளங்களில் அதிக நீர்வரத்து ஏற்பட்டதுடன் கிராமச் சாலை தரைப்பாலங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை வட்டம் மற்றும் திருச்சுழி வட்ட கிராமங்களில் குறிப்பாக பந்தல்குடி,கொப்பு சித்தம்பட்டி, உடைய நாதபுரம், மறவர் பெருங்குடி , கானா விளக்கு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் புதன்கிழமை இரவு விடிய விடிய பெய்த கன மழையால் மழை நீர் ஓடைகளிலும், கிராமச் சாலை தரைப்பாலங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக மறவர் பெருங்குடி, கானா விளக்கு செல்லும் தரைப்பாலங்கள், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கபட்டது. இரவு பெய்த தொடர் மழை (கன மழை)யால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...