மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கினால் என்ன? நீதிமன்றம்
மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கினால் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


மதுரை: மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கினால் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி குறளரசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ராணுவ வீரர்களின் வாரிகளுக்கு எத்தனை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன? மருத்துவக் கல்வியில் சேர முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். ராணுவ வீரர்களின் வாரிசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருந்தது.
முன்னதாக, தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயா்நீதிமன்ற அமா்வு தடைவிதித்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி ராணுவ வீரா்களின் வாரிசுகள் பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு எல்லையில் உள்ள வீரா்கள் தான் காரணம். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரா்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டாமா? பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவா் சோ்க்கையில் உரிய இடஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இடஒதுக்கீடும் தேவை இல்லை.
எனவே பணியிலுள்ள ராணுவவீரா்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...