வேல் யாத்திரை வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேல் யாத்திரை தொடர்பான பாஜக வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வேல் யாத்திரை தொடர்பான பாஜக வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூா் வரை வேல் யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்தது. இதை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கண்டித்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரியும் தமிழகத்தில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனுத் தாக்கல் செய்தது.
இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு மற்றும் பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முருகனின் அறுபடை வீடுகளுககு செல்வதுதான் வேல் யாத்திரை என்றால், முருகனின் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை திட்டமிட்டுள்ளது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் வேல் யாத்திரை குறித்த முழு விவரங்களுடன் கூடிய புதிய மனுவை டிஜிபியிடம் அளிக்கவும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் பாஜக தரப்பினருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இந்த வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...