விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமுளியில் போக்குவரத்து நெரிசல், விபத்து: பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் ஜீப் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :8 நவம்பர் 2020, 11:17 am

DIN

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் ஜீப் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஆண், பெண் தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் நாள்தோறும் சென்று வருகிறார்கள்.

பொதுமுடக்கம் காரணமாக தற்போது குமுளி வழியாக மட்டுமே அனைத்து ஜீப் வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எரிபொருள் செலவு, பயண நேரம், பொருள் விரயம் ஏற்படுகிறது. 

இதற்கிடையில் தமிழக - கேரள எல்லையில் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் குமுளி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் முந்திச் செல்வதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இதுபற்றி தோட்ட விவசாயி சொக்கராஜா கூறுகையில், கம்பம்மட்டு மலைச் சாலை வழியாக ஏலத் தோட்டங்களுக்கு ஜீப் வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தவிர்க்கப்படும். மாவட்ட நிர்வாகத்தினர் கலந்து பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.