தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள்
தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளன.
இதில், ராக்கெட் வெடியால் 84 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 22 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 40 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது. இதில், ராக்கெட் வெடியால் 33 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 7 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துகளில் 90 சதவீதம் மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நேரிட்டுள்ளது. தீவிபத்து குறித்து 57 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...