தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்
தமிழகத்தில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த மாவட்டங்களிலிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு, கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில், ஏற்கெனவே அரசு அறிவித்தபடி சிறப்புப் பேருந்துகள் உள்பட 3,125 பேருந்துகள், திங்கள் கிழமை நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கின.
சென்னையைப் பொருத்தவரை, கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், பணிபுரியும் ஊர்களுக்குத் திரும்புவதற்காக வரும் புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதன்கிழமை வரை, 4 நாள்களுக்கு 8,026 சிறப்பு பேருந்துகள் உள்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...