இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிகார் தேர்தல் வெற்றியிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பிகார் தேர்தல் வெற்றியிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

News image
ஜி.கே.வாசன்
Updated On :20 நவம்பர் 2020, 8:52 am

DIN

பிகார் தேர்தல் வெற்றியிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளதற்கு பாராட்டுக்கள். உறுதியோடு செயல்பட்டு முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதற்கு நன்றி.

கரோனா காலத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்ச்சி விவகாரம் சரியானதே. இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான முறைகேடு விவகாரத்தில், அமைக்கப்பட்ட விசாரணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து அரசு சரியான முடிவு எடுத்துள்ளது. அதேபோன்று தேர்வு தொடர்பாகவும் நல்ல முடிவு எடுப்பார்கள். 
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் தமிழ் மொழியைப் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களின் பலத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளைப் பெற்று, அதிமுக கூட்டணிக்கு வலு சேர்ப்போம்.

தமிழக அரசு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசின் விவசாய மசோதாவில் எதிர்க்கட்சிகள் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் உறுதியாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 
இந்த வெற்றியின் மூலம், எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், விவசாயிகளை ஏமாற்ற நினைக்க வேண்டாம்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். தேர்தல் பணிக்கும் வலு சேர்க்கும். கூட்டணியின் வெற்றிக்கும் உதவும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணியில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு தர மறுப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அறுவடையான நெல்லை அரசு உரிய முறையில் எடுத்து வருகிறது. அரசியல் ரீதியான எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடவில்லை. ஏழு பேர் விடுதலையில் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.