மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலியல் வன்கொடுமைகளின் நிலமாக இந்தியா மாறியுள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து

புனித பூமியாக இருந்த இந்தியா, தற்போது பாலியல் வன்கொடுமை பூமியாக மாறியுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

News image
பாலியல் கொடுமை பூமியாக மாறிய புனித பூமி: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
Updated On :1 அக்டோபர் 2020, 9:50 am

DIN

சென்னை: பாலியல் வன்கொடுமைகளின் நிலமாக இந்தியா மாறியுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மகாராஷ்டிரத்தில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து மகராஷ்டிரத்துக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழர்கள் பொதுமுடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய, மாநில  அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி,  திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி முறையிட்டார். 

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக் கட்டுப்பாடு,  ஊதியம் வழங்கப்படுவதில்லை . மேலும், புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதனால் பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது துரதிஷ்டவசமானது. குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.