அதிமுக தொண்டர்களின் நலன் கருதி முடிவெடுப்பேன்: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக தொண்டர்களின் நலன் கருதி முடிவெடுப்பேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


அதிமுக தொண்டர்களின் நலன் கருதி முடிவெடுப்பேன் என்று கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் பகவத்கீதையின் கீதாசாரத்தை மேற்கோள்காட்டி ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...