ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக அவைத் தலைவராக நானே நீடிப்பேன்: மதுசூதனன்

அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

News image
அதிமுக அவைத் தலைவராக நானே நீடிப்பேன்: மதுசூதனன்
Updated On :6 அக்டோபர் 2020, 7:53 am

DIN


சென்னை: அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்; எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

அதிமுகவின் அவைத் தலைவர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது, நான் இருக்கும் வரை அதிமுக அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை காரணமாக அதிமுக அவைத் தலைவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதுசூதனன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், என்னை அவைத் தலைவராக தேர்வு செய்யும் போது, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோர் போட்டியில் இருந்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.