மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

கரோனா நோயாளிகள் வீட்டின் வாயிலில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
வீட்டில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
Updated On :6 அக்டோபர் 2020, 8:11 am

DIN

சென்னை: கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் வசிக்கும் பகுதிகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? என  உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவருக்கு அறிகுறிகளே இல்லாத நிலையில் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  எங்களிடம் எங்கு சிகிச்சை பெறப் போகிறோம் என ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவரை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனர்.

அந்த கரோனா சிகிச்சை மையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்ற பின் என் வீட்டை தகரம் வைத்து அடைத்தனர். 

அறிகுறிகள் இல்லாத, குறைவான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு உள்ளவர்களை கரோனா சிகிச்சை மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு அவர்கள் வசிக்கும் பகுதியில்  தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன?

எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் சென்னை  மாநகராட்சி  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.