மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்றதாக பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கடத்தி சென்ற, தனது மகளை மீட்டுத்தரக் கோரி பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :6 அக்டோபர் 2020, 5:51 am

DIN

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கடத்தி சென்ற, தனது மகளை மீட்டுத்தரக் கோரி பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த  சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி உள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.

அப்போது நீதிபதி வழக்கை நாளை (அக்.7) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.