ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்

News image
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகளை வழங்குகிறார் ஒன்றியச் செயலர் என்சிஆர். ரத்தினம்.
Updated On :8 அக்டோபர் 2020, 7:13 am

DIN

சங்ககிரி: அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

அதிமுக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அறிவிப்பு செய்ததையடுத்து சேலம் மாவட்டம்,சங்ககிரி அதிமுக நிர்வாகிகள் சென்னை சென்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

Story image

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலர் என்சிஆர் ரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை பட்டாசுகள்வெடிக்க குழுமியிருந்த அதிமுகவினர். 

சென்னையிலிருந்து வியாழக்கிழமை சங்ககிரி திரும்பிய அதிமுகவினர் சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர்.ரத்தினம் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மேளங்கள் முழங்க, முதல்வர் வாழ்க என முழங்கியவாறு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உள்பட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

சங்ககிரி நிர்வாகிகள் மருதாஜலம்,  ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன்,  கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சி.செல்வம், நாரணப்பன்சாவடி சேகர், முன்னாள் தொகுதிகழகச் செயலர் வி.ஆர்.ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மாதையன், சின்னாகவுண்டனூர் கருப்புசாமி, நிர்வாகிகள் சிவமுருகன், ஏடிசி மோகன், முத்துகுமார், ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.