விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேனியில் முடிதிருத்துவோர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

News image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள்.

Updated On :9 அக்டோபர் 2020, 10:44 am

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கினை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயதுடைய மகள் கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கினை, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தற்கு நீதி வழங்கவும் அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று மாவட்டம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.