இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நள்ளிரவு வரை விசாரணை: 4 பேர் மீது வழக்குப் பதிவு

சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.38ஆயிரத்து 650கைப்பற்றி 4 பேர் மீது வழக்கு பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்

News image
சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தின் வாசல் கதவு பூட்டப்பட்டு சோதனை நடந்த காட்சி.
Updated On :15 அக்டோபர் 2020, 4:43 am

DIN

சீர்காழி: சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.38ஆயிரத்து 650கைப்பற்றி 4 பேர் மீது வழக்கு பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்

நாகை மாவட்டம் சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரம் பதிவு செய்ய வருபவரிடம் பத்திரப்பதிவு  சிலர் லஞ்சம் பெறுவதாக மாவட்ட  ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் புதன்கிழமை இரவு 6 மணி முதல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள் பிரியா தலைமையில் 8 காவல்ரகள் திடீரென சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து நுழைவாயிலை பூட்டிவிட்டு யாரையும் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியேறவும் அனுமதி மறுத்து 5 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் போது கணக்கில் வராத ரூ 38 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது . மீதமிருந்த ரூ. 51 ஆயிரத்து 100க்கு கணக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அலுவலகத்திலேயே ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு அவண எழுத்தர்கள் வல்லவன், பால குரு, ரவிச்சந்திரன், கணேசன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் 9788994343 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார். புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் வெளியில் கூறப்படாது எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.