கோயில் அறங்காவலர் விவரங்களை ஏன் வெளியிடக் கூடாது? உயர் நீதிமன்றம்
கோயில் அறங்காவலரின் பெயர், தொழில், வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னை: கோயில் அறங்காவலரின் பெயர், தொழில், வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோயில் பொறுப்பில் உள்ளவர்களின் விவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? என்று பெரியநம்பி நரசிம்ம கோபலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிர்வாகிகளின் சுயவிவரங்களை கோயில் அறிவிப்புப் பலகையில் ஏன் வெளியிடக் கூடாது? அறங்காவலர்களின் பெயர், தொழில், சுய வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...