இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிளஸ்1, பிளஸ் 2 தேர்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுக

News image
பிளஸ்1, பிளஸ் 2வில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
Updated On :7 செப்டம்பர் 2020, 9:30 am

DIN

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல் (ரீ-டோட்டல்) மற்றும் மறுமதிப்பீடு (ரீவேல்யூஷன்) கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (நோட்டீஃபிகேஷன் பக்கத்தில்) 08.09.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் உடன் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.