மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :19 செப்டம்பர் 2020, 8:47 am

DIN

அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்பட்டது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, அதிமுக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை. அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.