இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு 29.09.2020 அன்று தொடங்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத ஏற்கெனவே சேவை மையங்கள் வாயிலாக, ஆன் - லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தற்போது http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகிளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும்.