மணல் கடத்தல்: நெல்லை மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மணல் கடத்தல்:மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி
மணல் கடத்தல்:மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி சிவகங்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடமையைச் செய்யத் தவறிய கனிம வளம், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் என்றும், இந்த கேள்விகளுக்கு நெல்லை ஆட்சியர், நெல்லை காவல்துறை எஸ்.பி. ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com