மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடையை எதிர்த்து வழக்கு

திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

News image
குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடையை எதிர்த்து வழக்கு
Updated On :28 செப்டம்பர் 2020, 9:15 am

DIN

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய 2வது நோட்டிஸுக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவை நீக்க கோரி உரிமை குழு தலைவர், பேரவைச் செயலாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளன. இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன்பின்னரும், மனுதாரா்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிா்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் கடந்த வாரம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதித்தாா். மேலும் இதுதொடா்பாக பேரவைத் தலைவா், பேரவைச் செயலாளா், உரிமை மீறல் குழுவின் தலைவா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபா் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உரிமைமீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.