குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை: வைத்திலிங்கம்

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடந்த  ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பா

News image
தலைமை அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்கள்.
Updated On :29 செப்டம்பர் 2020, 6:18 am

DIN


சென்னை: அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடந்த  ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என இருவருக்கும் நான் ஆதரவாளனாகவே இருக்கிறேன் என்று கூறினார். 

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து கடும் விவாதம் எழுந்ததாக தகவல்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.