இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீட் தேர்வில் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்றுவதை எதிர்த்து வழக்கு

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
நீட் தேர்வில் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்றுவதை எதிர்த்து வழக்கு
Updated On :30 செப்டம்பர் 2020, 8:04 am

DIN

சென்னை: நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அரவிந்த் ராஜ் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான   நீட் நுழைவுத் தேர்வு நடத்தபட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும்  மாணவிகள் நகைகளை அணிய கூடாது , பர்ஸ் வைத்திருக்கக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்தக் கட்டுபாடுகளால், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாகக் கருதும் தாலி, மெட்டி,  காதணி, மூக்குத்தி போன்றவைகளை அகற்ற நிர்பந்திக்கபடுகின்றனர். தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நகைகளை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது. 

இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  நகைகளை அகற்ற, மாணவிகளை நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.