பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கல்வி முறை தொடரும் என்றும், பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் இணைய வழிக் கல்வியை தொடரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் வருகைப் பதிவேடு கட்டாயமில்லை என்றும் பஞ்சாப் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகம்; தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாா்

காங்கிரஸ் மீது தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

போலீஸ் சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா அழிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



