வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 6:22 am IST

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெற்ற ஊதிய பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

எனவே, திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஜன.7) அனைத்து மண்டலங்களிலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அடுத்த பேச்சுவாா்த்தையில் அமைச்சா் கலந்து கொள்வாா் என்று மாநகரப் போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் தெரிவித்தாா்.

போக்குவரத்துச் செயலரும் கூட்டமைப்பின் கருத்தை எற்றுக்கொண்டு, பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்தி, தோ்தல் அறிவிப்புக்கு முன்பு ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

 இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.